தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா ஆகியோர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் (19.11.2024) நேற்று நடைபெற்றது. விழிப்புணர்வு முகாமிற்கு நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தலைமை ஏற்றார். முகாமில் சிறப்பு விருந்தினர்களாக முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா, நீதியரசர் இளவரசி, நீதியரசர் செல்வி.பரிமளா, நீதியரசர் திருபாலதண்டாயுதம், பொது மேலாளர்கள் S.சிங்காரவேல், S.ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஓட்டுநர் போதகர்கள் என 250 நபர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாமில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா பேசியதாவது..... ஓட்டுநர்கள் நடத்துநர்கள் கவனமாக செயல்பட்டு அதே நேரம் விபத்துக்கள் ஏற்படாதவாறு பேருந்துகளை இயக்க வேண்டும். குறிப்பாக ஓட்டுனர்கள் சொந்த பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் மனதில் வைத்து ஓட்டுனர் பணியை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பேருந்தில் இருக்கும் 50 பயணிகள் உங்களை நம்பிதான் நிம்மதியாக பயனிக்கின்றனர். தவிர்க்க முடியாமல் விபத்து ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓட்டுனர்கள் உதவி செய்வதோடு அவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பணியாற்றக்கூடிய நிர்வாகத்திற்கும். காவல் துறைக்கும் உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு உதவவேண்டும்.

ஒவ்வொரு பயணிகளின் குடும்பத்தின் நிலைமைகளை உணர்ந்து கவனமாக விபத்தில்லாமல் இயக்க வேண்டும். தேவைப்படுகின்ற மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு ஓட்டுனர்கள் உதவிகரமாக இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என எடுத்து சொல்லி அவர்களையும் பாதுகாப்பாக பயணிப்பதற்கு உதவ வேண்டும்.

கட்டாயமாக பேருந்துகளை இயக்கும் பொழுது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். சேவை மனப்பான்மையோடு இப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் தங்கள் உடல் நலனிலும் முழு அக்கரை செலுத்த வேண்டும் எனபல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

முகாமிற்கு தலைமை வகித்த நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி பேசியதாவது........ ஒரு காலத்தில் நடை பயணமாக பயணித்த போது கால விரயமாக இருந்த போக்குவரத்து இன்று முழு வளர்ச்சியடைந்து வாகனங்கள் மூலம் குறித்த நேரத்தில் பயணிக்க கூடிய கால கட்டத்திற்கு வந்துள்ளோம். கால நேரம் பார்க்காமல் உழைக்கும் ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் பயணிகளின் நலன் கருதி பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

கடைகளில் தங்களின் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். கவனமாக பணிகளை மேற்கொண்டால் விபத்துகள் தவிர்ப்பதோடு மேலும் மேலும் பதவி உயர்வுகள் பெற்று உங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து தங்களுடைய குடும்பத்தின் தரத்தை உயர்த்திட இயலும். நேரம் ஒதுக்கி நடைபயிற்சி, மூச்சுபயிற்சி போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.

கிராமபுரத்தில் உள்ள தினந்தோறும் பயணிக்கும் பயணிகளை தேவைப்பட்டால் அவர்கள் கேட்கின்ற இடத்திலும் நிறுத்தி இறக்கி விட்டால் அவர்கள் அனைவரும் நமது போக்குவரத்து கழகத்தின் நிரந்தர வாடிக்கையாளராக வருவார்கள். முகாமிற்கு வருகை தந்துள்ள ஓட்டுனர்களின் குடும்பத்தினர்கள் பணிக்கு செல்லும் ஓட்டுனர்களுக்கு அன்பும், ஆதரவும் அளித்து அனுப்பி வைக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் குடும்பத்தோடு தங்கள் நேரத்தை செலவிடவேண்டும்.

கிராமப்புறங்களில் எங்க ஊர் வண்டி வந்துவிட்டது என பொதுமக்கள் விரும்பி பயணிக்க கூடிய வாகனம் அரசு பேருந்து மட்டும் தான் என்று சொல்லும் அளவிற்கு நமது போக்குவரத்து சேவை மிகவும் முக்கியமானதாகும். நம்மை நம்பி ஏறிவரும் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கி அவர்களை பாதுகாப்பாக தேவைப்பட்டால் அவர்கள் விரும்புகின்ற இடத்தில் கூட இறக்கிவிட வேண்டும்.

போக்குவரத்து கழகத்தின் வருவாயை அதிகரிக்கவும் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். உங்களுடைய ஊதியத்தை உபயோகமாக குடும்ப வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல பணிகளுக்கு அவர்கள் செல்கின்ற அளவிற்கு உதவ வேண்டும்.

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் கடந்த ஆண்டு 8 உயரிய விருதுகளை பெற்ற போக்குவரத்து கழகமாக உயர்ந்து நிற்கின்றது. ஓட்டுனர்கள். நடத்துனர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் உழைப்பின் காரணமாக மிகபெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. உழைப்பு, பயிற்சி, முயற்சி என்கின்ற வார்த்தைகளை மனதில் கொண்டு சிறப்பாக செயலாற்றி பலநூறு ஆண்டுகாலம் இப்போக்குவரத்துக் கழகம் நீடித்து சேவைகளை வழங்குவதோடு பல்லாயிரம் கணக்கான படித்தோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும்.

எனவே, முழு ஒத்துழைப்போடு பணியாற்றுங்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தயாராக உள்ளார்கள். விபத்து இல்லாத பயணத்தை வழங்கி அதிக வருவாய் ஈட்ட உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நிர்வாக இயக்குனர் பேசினார்.

முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர்.ராஜேஸ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் கோகிலா, போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திருநாவுகரசு, போக்குவரத்துக் கழக வழங்கறிஞர் மோகன்ராஜ், துணை மேலாளர்கள் தங்கபாண்டியன், ராஜேந்திரன், ராஜேஷ், உதவி பொறியாளர் ரொஜ்மோகன், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், ஓட்டுனர் போதகர்கள் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision