நிதி மோசடி செய்த எல்பின் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் தெரியப்படுத்த காவல்துறை அறிவிப்பு

நிதி மோசடி செய்த எல்பின் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் தெரியப்படுத்த காவல்துறை அறிவிப்பு

திருச்சி மன்னார்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்த எல்பின் (Elfin) நிறுவனம், பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்நிறுவனத்தை சேர்ந்த 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு சொகுசு கார்களை பறிமுதல் செய்து, 257 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்யப்பட்ட பணத்தில் வேறு வங்கி கணக்குகளோ, வேறு சொத்துக்களோ இருப்பது குறித்த தகவல் இருந்தால் உடனடியாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் தெரியப்படுத்தவும் என்று சிறப்பு புலனாய்வு குழுவின் துணை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn