திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகம் - 4 பேர் கைது
திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் குடியிருப்புக்கு பின்புறம் காசியா பிள்ளை காலனி பகுதியில் கேரள மாநில ஒரு நம்பர் லாட்டரி சர்வ சாதாரணமாக கூட்டமாக விற்பனை நடைபெற்று வந்தது.
ஒரு குழுவாக அமர்ந்து பத்து பேர் காகிதத்தில்நம்பர்களை எழுதுவார்கள். இப்பகுதிக்கு தினமும் கூலி வேலை செய்து ஊதியம் வாங்குபவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் காலை 11 மணிக்கு மேல் மூன்று மணிக்குள் நேரடியாக வந்து பணத்தைக் கட்டி நம்பரை குறிப்பிட்டு சொல்லிவிட்டு செல்வார்.
சிலர் இவர்களை கைபேசி எண்ணில் அழைத்தும் நம்பர்களை பதிவு செய்து கொள்வார்கள். அதற்கு Gpay வாயிலாக பணமும் செலுத்தி விடுகிறார்கள்.
இவர்களுடைய கைபேசி எண் அவர்கள் பதிவு செய்து கொள்வார்கள். இந்த ஒரு நம்பர் லாட்டரிக்கான முடிவுகள் மதியம் மூன்று மணிக்கு கேரள மாநிலத்தில் இருந்து இணையதளம் வாயிலாக வெளியிடப்படும். அங்குள்ள தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்படுகிறது இதனை அவர்களுக்கு தெரிவிக்கின்றனர்.
இந்த லாட்டரி ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு என்று இலக்கம் இருந்தால் அதில் ஐந்து இலக்கம் எண்ணை குறிப்பிட்டு அந்த எண் முடிவு வாயிலாக வந்தால் வெற்றி பெற்றவருக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசு தொகை. மேலும் அதில் இரண்டு லட்சம் ,25 ஆயிரம் ரூபாய் நூறு ரூபாய் 50 ரூபாய் என பரிசு தொகைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன .
ஒரு நம்பர் லாட்டரி சீட்டின் விலை ஐந்து ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா உத்தரவின் பெயரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். 1நம்பர் லாட்டரி விற்பனை முழுவதும் தடை செய்யப்படும். வெளிமாநில லாட்டரி விற்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா உத்தரவின் பேரில் பாலக்கரை காவல் நிலைய தனிப்படை காவலர்கள் ஒரு நம்பர் லாட்டரி விற்றமணிகண்டன், கருப்பையா பூபதி செல்வம் ஆகிய நான்கு பேரை அடையாளம் கண்டு மூன்று மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்யும் இளையராஜா என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சிறையில் உள்ளார் . அவருடைய (மச்சான்) உறவினர் செல்வம் இதில் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.