நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் ஆய்வு
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் அறிவுறுத்தலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் நடமாடும் உணவு பாதுகாப்பு வாகனம் மூலம் பொதுமக்கள் உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு டிசம்பர் 1 முதல் 30 வரை பயணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு கலப்படம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட பகுதிகளில் 23 உணவு வணிகங்கள் ஆய்வு மேற்கொண்டு 32 உணவு வகைகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஐந்து வகைகள் தரம் அற்றவை என்று கண்டறியப்பட்டு வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டது. மேலும் ஆய்வின்போது இனிப்பு மற்றும் கார வகைகள் 13 கிலோ தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருப்பதை அறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் கூறுகையில், நடமாடும் உணவு பாதுகாப்பு வாகனம் மூலம் பொதுமக்கள் உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அனைவருக்கும் உணவு கலப்பட மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பயணிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களது பகுதிகளுக்கு இந்த வாகனம் வரும்பொழுது பொதுமக்கள் அவர்களிடம் உள்ள உணவுப் பொருள்களில் கலப்படம் உள்ளதா என உடனடியாக கண்டறியலாம் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO