திருச்சி மாநகராட்சியில் இல்லம் தேடி கோவிட் தடுப்பூசி

திருச்சி மாநகராட்சியில் இல்லம் தேடி கோவிட் தடுப்பூசி

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள 65 வார்டுகளில் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வீட்டிற்கு சென்று போடப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மாநகராட்சி நகர்நல அலுவலர் தலைமையில் நான்கு மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமும் காலை 10 மணிக்கு மேல் மாநகராட்சி பகுதிகளை தேர்வு செய்து அப்பகுதிகளில் கோவிட் தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி இதற்காக தனியாக முன்பதிவிற்கு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது 63 85 269208 இந்த எண்ணில் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் கோவிட் தடுப்பூசி இல்லங்கள் தேடி மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசியை போடுகின்றனர். 

குறிப்பாக இதில் மாற்றுத்திறனாளிகள், படுக்கையை விட்டு எழுந்து வர முடியாதவர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. திருச்சி மாநகராட்சி தொடர்ந்து வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. இன்று தில்லை நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மருத்துவ பணியாளர்கள் கோவிட் தடுப்பூசிகளை செலுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn