அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி இன்று
போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியினை கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் க.சா .மகேந்திர குமார், தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி இன்று (26/06/2024) எடுத்துக் கொண்டனர்.
உடன் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ .முத்துகிருஷ்ணன், பொது மேலாளர் ( தொழில்நுட்பம் கூட்டாண்மை) நாசர் துணைமேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், துணை மேலாளர் (பயிற்சி) சங்கர் , துணை மேலாளர் வணிகம் (பொறுப்பு ) புகழேந்தி, போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision