ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிவிழாக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 14 ஆம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

Advertisement

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் இன்று காலை நடைபெற்றது. 

அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள், ஆலயத்தினரின் முன்னிலையில் முகூர்த்தக்கால் பூஜிக்கப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் நடப்பட்டது. 

பொதுமக்கள் யாரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை. வைகுண்ட ஏகாதசியானது பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.14 ஆம் தேதி தொடங்கும் இந்த விழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 04.45மணிக்கு நடைபெற உள்ளது.