திருச்சி நவலூர் குட்டபட்டு ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் -களத்தில் காளையர்கள்

Jan 19, 2022 - 00:26
Jan 19, 2022 - 09:25
 608
திருச்சி நவலூர் குட்டபட்டு ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் -களத்தில் காளையர்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ராம்ஜிநகர் அடுத்துள்ள நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்படும் அறிவிக்கப்பட்ட நிலையில், காலதாமதமாக 10:30 மணிக்கு தான் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. போட்டியை ஒன்றிய பெருந்தலைவர் கருப்பையா கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த ஜல்லிக்கட்டில் 300 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

ஜல்லிக்கட்டு காளைகள் மாடுபிடி வீரர்களை அருகில் விடாமல் விரட்டியடித்தது மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடிக்க முடியாமல் தவித்தனர். காளைகளை அடக்க முயன்ற போது பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகள் முட்டி தூக்கியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, ப்ரிட்ஜ், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் போட்டியினை நின்று கண்டுகளிக்க சுற்றிலும் இரும்பிலான கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாடுபிடி நடைபெறும் மைதானத்திதற்குள் பார்வையாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து விடாதபடியும், 8அடி உயர இரும்பிலான பாதுகாப்பு அரண்கள் மைதானத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாடுகள் பாதுகாப்புடன் அழைத்துவர ஏதுவாக இரும்பு மற்றும் மரத்தினால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாடுபிடிவீரர்கள் மட்டுமே பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளுர் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெற்றிபெறும் மாடுபிடிவீரர் மற்றும் காளைகளுக்கு தங்கம், வெள்ளிகாசுகள், பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn