திருச்சி வயலூர் முருகன் கோயிலில் தைப்பூச விழா பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - கோவில் வாசலிலேய சாமி தரிசனம்

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் தைப்பூச விழா  பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - கோவில் வாசலிலேய சாமி தரிசனம்

திருச்சி வயலூர் முருகப்பெருமானை அருணகிரிநாதர் வழிபட்டு 18 பாடல்கள் புனைந்த பெருமை கொண்ட தலம். திருச்சியில் பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோயிலில் தைப்பூச விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தைப்பூச நாளில் திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி சுற்று வட்ட மாவட்டங்களில் இருந்து 1000த்திற்க்கு மேற்பட்ட பக்தர்கள் பால் குடம், அழகு, காவடி எடுப்பது வழக்கம். இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக அனைத்து கோவில்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் பக்தர்கள் பலர் வயலூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர்.

கோவில் மூடப்பட்டிருந்ததால் வாசல் முன்பு தீபங்கள் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தங்களது நேர்த்திகடனையும் செலுத்தி மனமுருகி முருகரை வழிப்பட்டனர். கொரோனா தொற்று முற்றிலும் நீங்க பிரார்த்தித்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு நின்று வழிப்பட்டு சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn