களரிபயட்டு போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர்
6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும்,
கூடைப்பந்து மற்றும் தாங்-டா விளையாட்டுகள் கோயம்புத்தூர் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டுகள் மதுரை மாநகரிலும், சிலம்பம் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து போட்டிகள் நடைபெறும் இடங்களிலும் அறிமுகப் போட்டியாக நடைபெற்று வருகிறது. இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரில் நடைபெற்று வருகிறது.
திருச்சிராப்பள்ளி அண்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் (21.01.2024) முதல் (24.01.2024) வரை மல்லர்கம்பம் போட்டிகள் நடைபெற்று (24.01.2024 அன்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன் ஆகியோர் வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து இன்று (27.01.2024) திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கில் களரிபயட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தொடங்கி வைத்தார். இப்போட்டிகள் இன்று (27.01.2024) தொடங்கி (29.01.2024) வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
திருச்சிராப்பள்ளி அண்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் தமிழ்நாடு, சட்டீஸ்கர், டெல்லி, கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்ட்ரா, அஸ்ஸாம், உத்ரபிரதேசம், கேரளா, இமாச்சலபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், அஸ்ஸாம், பஞ்சாப், ஜம்மூ ரூ காஷ்மீர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 16 மாநிலங்களிலிருந்து 103 வீரர்கள் 87 வீராங்கனைகள் மற்றும் 51 பயிற்றுநர்கள் & அணி மேலாளர்கள் என 241 நபர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
களரிபயட்டு போட்டியானது சுவடுகள், கெட்டுக்கெறி, வாள்சண்டை, ஹைகிக் ஆகிய 4 பிரிவுகளில் ஆண்ஃபெண் இருபாலருக்கும் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளாக நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வுகளில் போட்டி மேலாளர்கள், இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.