பள்ளத்தில் விழுந்த கார் - அதிர்ஷ்டமாக உயிர் தப்பிய 3 போதை ஆசாமிகள்

பள்ளத்தில் விழுந்த கார் - அதிர்ஷ்டமாக உயிர் தப்பிய 3 போதை ஆசாமிகள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள திருவாசி கிராமம் அருகே முசிறியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக மூன்று நபர்கள் மது போதையில் காரில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மது போதையில் இருந்த ஒருவர் காரை ஓட்டி வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்ததால் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் கவிழ்ந்த இடத்தில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த காரில் வந்த மூன்று நபரையும் விசாரித்த போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக மூவருக்கும் மது போதையில் கார் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர். மது போதையில் காரை ஓட்டி பள்ளத்தில் இறங்கி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision