குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்

குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்

இப்படத்தில் காணும் பெண் குழந்தை திருச்சிராப்பள்ளி மாநகரம். கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வருகின்ற நாகம்மையார் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டிலில் (03.11.2024) அன்று பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக திருச்சிராப்பள்ளி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்தவுடன் (27.11.2024) அன்று குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜெயஸ்ரீ என்று பெயர் வைக்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவின் ஆணையின் அடிப்படையில் தற்காலிகமாக திருச்சிராப்பள்ளி சாக்சீடு சிறப்பு தத்துவள மையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்.

இக்குழந்தையின் உயிரியல் பெற்றோர் அல்லது உறவினர்கள் எவரேனும் உரிமை கோர விரும்பினால், இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கலையரங்கம் வளாகம், மெக்டொனல்டு ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி -1 0431-2413055/6369102865/8122201098

தலைவர் / உறுப்பினர்கள், குழந்தைகள் நலக்குழு, கலையரங்கம் வளாகம், மெக்டொனல்டு ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி - 1. (0431-2413819), (9894487572)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision