இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா மற்றும் தோழர் ஜீவாவின் நினைவு நாள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா மற்றும் இலக்கிய பேராசான் ஜீவாவின் 62 ஆவது நினைவு நாள் மேற்கு பகுதி குழு 27வது வார்டு தென்னூர் பகுதியில் ரஹீம் கான் தலைமையில் ராமச்சந்திரன் பாட்ஷா, முன்னிலையில் படையப்பா கிராமிய இசைக்குழு பறை இசையுடன் ஜீவாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்விற்கு மேற்குப் பகுதி துணைச் செயலாளர் முருகன் தலைமையில் துரைராஜ், முருகேசன் முன்னிலையில் தோழர் ஜீவாவின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சிறப்பபு அழைப்பாளராக 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் பங்கேற்றார்.
மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி, பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் சூர்யா, மாதர் சம்மேளன மேற்கு பகுதி செயலாளர் சுமதி, பகுதி குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சத்யா, தர்மா, ஜெய்லானி, மௌலானா, ஆனந்தன், சீனிவாசன், நாகராஜன் உள்ளிட்ட பலரும் பங்கு பெற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision