திருச்சி பச்சமலை பெண்களுக்கு 6000 இயற்கை நாற்றுகளை வழங்கிய VDart குழுமம்

திருச்சி பச்சமலை பெண்களுக்கு 6000 இயற்கை நாற்றுகளை வழங்கிய VDart குழுமம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சை மலையில் வாழும் மலைவாழ் மக்கள் நிலப்பகுதிக்கு வந்து காய்கறிகளை வாங்குவது சிரமம்.  இயற்கையான உணவுகளை அவர்கள் உட்கொள்ள வேண்டும் என்பதற்காக வெண்டை, கத்திரி தக்காளி, மிளகாய்  மூன்று கீரை வகைகள் நாற்றாக, விதைகளை இம்முயற்சி மேற்கொண்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் நேரடியாக நிலத்தில் நட்டனர்.

மேலும் மலைவாழ் பெண்களுடன் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களும் வாழ்க்கை நடைமுறைகளை குறித்து பரிமாறிக் கொண்டனர். 60 மலைவாழ் பெண்களுக்கு 100 வீதம் நாற்றுகள், பல்வேறு காய்கறி விதைகள் 6000 VDart நிறுவன பெண் ஊழியர்கள் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn