ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி நிறைவு விழா மற்றும் கண் சிகிச்சை முகாம்

ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி நிறைவு விழா மற்றும் கண் சிகிச்சை முகாம்

திருச்சி மாநகர ஆயுதப்படை காவலர்களின் கூட்டு திரட்டு கவாத்து பயிற்சி நிறைவு விழா மற்றும் காவல் ஆளிநர்களுக்கான கண் சிகிச்சை முகாம்நடைபெற்றது

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா, திருச்சி மாநகர பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் நலன் காத்திட பல்வேறு முகாம்களை நடத்திட காவல் துணை ஆணையர்கள், தெற்கு, வடக்கு மற்றும் தலைமையிடம், காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்படி இன்று(04.02.2023)-ந்தேதி திருச்சி மாநகர ஆயுதப்படையில் உள்ள காவல் ஆளினர்களுக்கு கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த கூட்டு திரட்டு கவாத்து பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த கூட்டு திரட்டு கவாத்தில் 225 ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள். இப்பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட திருச்சி மாநகர காவல் ஆணையர்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றும், காவல் ஆளிநர்களுடன் கலந்துரையாடியும், ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்தும், அவர்களது குறைகள் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொண்டார்.

மேலும் மாநகர ஆயுதப்படை உள்ள காவல் ஆளிநர்களின் உடல்நலனை காக்கும் பொருட்டு ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் மாநகர சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு இலவச கண் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காவல் ஆளிநர்கள் புத்துணர்வு பெரும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக தொடங்கபட்ட தேநீர் அங்காடியை திருச்சி மாநகர காவல் ஆணையர்  திறந்து வைத்தார்.

இப்பயிற்சியின் நிறைவு விழாவில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் காவல் ஆணையர் மாநகர ஆயுதப்படை, காவல் உதவி ஆணையர் கே.கே.நகர் சரகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn