திருச்சி அருகே திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் வழிபாடு

திருச்சி அருகே திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் வழிபாடு

திருச்சி அருகே திருநாவுக்கரசரால் பாடல் பெற்றதும், திருமாலும், பிரம்மனும், ரிஷிகளும் வழிபட்டதும், இந்திரனும், தேவரும் எறும்புவடிவம் கொண்டு வழிபட்ட திருத்தலமான எறும்பீஸ்வரர் ஆலயம் திருச்சி திருவெறும்பூரில் உள்ளது. 1100 வருடங்களுக்கு முன்பு கரிகாலச் சோழனால் கட்டப்பட்டதுமான இக்கோவில் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கந்த சஷ்டிவிழாவானது கடந்த 4ம்தேதி தொடங்கி நடைபெற்று நேற்றைய தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று (10.11.2021) தேவசேனா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கோவில் மண்டபத்தில் முருகப்பெருமான், தெய்வானை அம்பிகை சமேதராக மேடையில் வீற்றிருக்க, ஹோமகுண்டம் வளர்க்கப்பட்டு கோவில் குருக்கள் சிவஸ்ரீகணேஷ் தலைமையில் சிவாச்சார்யார்களின் மந்திரங்கள் முழங்கிட, கெட்டி மேளங்கள் ஒலிக்க திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக சிவாச்சார்யார்களால் நடத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனையும் நடபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தங்களது வாழ்வு சிறக்கவும், இயற்கை இடர்பாட்டிலிருந்து நீங்கி நித்திய கல்யாண சுபவாழ்வு வாழவும் மணக்கோலத்தில் காட்சி தந்த முருகப்பெருமான், தெய்வானை சமேதரரை வழிபாடு செய்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision