வங்கி ஊழியரை கடத்தி மிரட்டி பலாத்காரம் செய்த நபர் மீது வழக்கு பதிவு

வங்கி ஊழியரை கடத்தி மிரட்டி பலாத்காரம் செய்த நபர் மீது வழக்கு பதிவு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தில்லை நகரில் உள்ள தனியார் வங்கியில் தற்போது கடன் வழங்கும் அலுவல் பணியில் உள்ள 33 வயது பெண்ணிடம், கடந்த 2020 ஆம் ஆண்டு கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளக்குடி அகிலாண்டபுரத்தில் வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்டுவதற்காக கீழவாங்கரையைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரிடம் ஒப்பந்தம் செய்து ரூ.5000/-த்தினை முன்பணமாக கொடுத்துள்ளார். பின்பு வீட்டு வேலை ஆரம்பிக்க வேண்டி ரூ. 2,00,000/- பணத்தினை ஒப்பந்தகாரர் வெற்றிச்செல்வனிடம், தனது அப்பா மூலம் கொடுத்துள்ளார்.

மேற்படி ஒப்பந்தகாரர் வெற்றிச்செல்வன் பல்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டு வீடு கட்டித்தராமல் ஏமாற்றி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்ட பணத்தினை திரும்பி கேட்ட போது ஒப்பந்தகாரர் பணத்தினை தர மறுத்ததால், தன்னுடன் வேலை பார்க்கும் கோகுல் என்பவரிடம் நடந்த சம்பவத்தினை சொல்லியதால், கோகுல் தனது நண்பரிடம் சொல்லி வெற்றிச்செல்வத்திடம் கொடுத்த பணத்தினை பெற்று விடலாம் என்று வெங்கங்குடியைச் சேர்ந்த சித்தார்த் (எ) பிரதீபன் (சரித்திர பதிவேடு குற்றவாளி எண். 13/20) என்பவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண். சித்தார்த்திடம் நடந்த சம்பவங்களை கூறியதால், நான் உன்னுடைய பணத்தினை வெற்றிச்செல்வத்திடம் இருந்து பெற்று தருகிறேன் என் கூறியதால், இது சம்மந்தமாக இருவரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பில் இருந்து வந்ததுடன் நேரடியாகவும் சந்தித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட சித்தார்த். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜீலை மாதம். கரூர் பைப்பாஸ் ரோட்டில் உள்ள சத்யா எலக்ட்ரானிக் கடைக்கு அருகே நின்று கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம், மேற்படி சித்தார்த் கத்தியைக் காட்டி மிரட்டி காவேரி பாலம் அருகே உள்ள ஒரு லாட்ஜிற்கு அழைத்து சென்று கத்தியைக்காட்டி மிரட்டி கட்டாய உடலுறவு கொண்டு அதனை செல்போனில் Video மற்றும் Photo எடுத்து வைத்துகொண்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்த நிலையில்,

கடந்த (02.10.2023)- ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்படி சித்தார்த் தான் எடுத்து வைத்துள்ள Video மற்றும் Photo-க்களை காட்டி நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால் அதனை உனது கணவருக்கும், சமூக வலைதளங்களில் அனுப்பிவிடுவேன் என மிரட்டி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றவர் நம்பர் 1 டோல்கேட் அருகே சென்ற போது பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து 4 பவுன் செயினை பறித்து சென்று விட்டதாகவும், மேற்படி சித்தார்த் (எ) பிரதீபன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால் பாதிக்கப்பட்ட பெண் பயத்தில் நீண்ட நாட்களாக புகார் அளிக்காமல் இருந்து வந்தநிலையில், மேற்படி சித்தார்த் (எ) பிரதீபன் தற்போது மண்ணச்சநல்லூர் கா.நி குற்ற வழக்கில் கடந்த (19.01.2024)-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதால், மேற்படி பாதிக்கப்பட்ட பெண் நேற்று (10.02.2024) கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில். இலால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 04/24 ச.பி. 294(b). 354(D), 376(ii) (n), 397, 506(ii) IPC & 65(E). 67 of IT Act & 4 of TNPWH Act வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision