திருச்சி மாநகர போலீசார் கையில் பிஸ்டல் ரக துப்பாக்கி - ஆணையர் பயிற்சி

திருச்சி மாநகர போலீசார் கையில் பிஸ்டல்  ரக துப்பாக்கி - ஆணையர் பயிற்சி

திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் எஸ்ஐ முதல் உதவி ஆணையர் வரை உள்ள காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகப்படுத்தும் பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் திருச்சி மாநகரில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல்நிலையம், குற்றப்பிரிவு காவல்நிலையம், மாநகர ஆயுதப்படை அதிகாரிகள் என மொத்தம் சுமார் 530 பேர் கலந்து கொண்டனர்.

இதில் 46 காவல் அதிகாரிகளுக்கு கைதுப்பாக்கியை எப்படி கையாளுவது, துப்பாக்கிகளின் உதிரி பாகங்களை தனிதனியாக பிரித்தும், மீண்டும் துப்பாக்கிகளை ஒன்றினைத்து, அவற்றை பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. காவல் ஆளிநர்கள் வாரந்திர கவாத்து மேற்கொண்டனர். இப்பயிற்சியினை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரடியாக ஆய்வு செய்து துப்பாக்கிகளை கையாளுவது குறித்து விளக்கம் அளித்தார்.

முக்கியமாக துப்பாக்கி பிரயோகப்படுத்துவதற்கு முன்னதாக செய்ய வேண்டிய வழிமுறைகள் கையில் வைத்திருந்தால் பாதுகாப்பாக வைத்திருப்பது உள்ளிட்ட அனைத்து அறிவுரைகளையும் மாநகர காவல் ஆணையர் இவர்களுக்கு வழங்கினார். தமிழ்நாடு காவல்துறை சட்ட ஒழுங்கு கூடுதல் இயக்குனர் டேவிட்சன் பொறுப்பேற்ற பொழுது எஸ்ஐ முதல் டிஎஸ்பி வேலை உள்ளவர்கள் துப்பாக்கி கையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 தற்பொழுது திருச்சி மாநகர போலீசாருக்கு துப்பாக்கி பயன்படுத்தும் வழிமுறைகளுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சி மாநகர போலீசார் கையில் இனி பிஸ்டல் ரக துப்பாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision