திருச்சியில் டிஎன்பிசி குரூப்-1 தேர்வு 50% பேர் எழுதவில்லை ஏன்?
துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதன்மை தேர்வு இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கி 12:30 மணி வரை நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 31-தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 904 பேர் விண்ணப்பித்தனர். 6719 பேர் தேர்வு எழுதுகின்றனர். 3179 தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேர்வு கூட மையங்களில் 31 தேர்வுமைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, துணை கலெக்டர் நிலையில் 3 பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision