ஜி வி என் ரிவர்சைட் மருத்துவமனையில் அதி நவீன கேத் லேப் திறப்பு

ஜி வி என் ரிவர்சைட் மருத்துவமனையில் அதி நவீன கேத் லேப் திறப்பு

திருச்சி ஜி வி என் ரிவர்சைட் மருத்துவமனையில் அதி நவீன கேத் லேப் திறப்பு விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவர்.H.A. உமேஷ் I.O.F.H.S., Chief Medical Officer ( Ordinance Factory Hospital) அவர்கள் திறந்து வைத்தார்.

இருதய நோய் மருத்துவர் ஆதில், நிர்வாக இயக்குனர் மருத்துவர் வி.ஜெ.செந்தில், இயக்குனர் மருத்துவர் கவிதா செந்தில், தலைமை நிர்வாக அதிகாரி மருத்துவர் சக்தி யாதவ், மருத்துவ இயக்குனர் மருத்துவர் ராகேஷ் நடேசன் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து இருதய நோயால் பாதிக்கப்படும் மக்களுக்காக அதி நவீன கேத் லேப் இயந்திரம் மூலம் Angiogram, Angioplasty மற்றும் pacemaker போன்ற சிறப்பு சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர்.

இதில் சிறப்பு அம்சமாக 35 வயதுக்கு மேல் முன்பதிவு செய்யும் முதல் 85 நபர்களுக்கு ECG, Echo மற்றும் மருத்துவ ஆலோசனை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision