"வக்கீல் அட் வாட்" காலாண்டு இதழை வெளியிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
திருச்சி நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் "வக்கீல் அட் வாட்" என்ற காலாண்டு இதழ் வெளியீட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ப்ரிஸ் ரெசிடெண்ட்ஷி ஹோட்டலில் நடைபெற்றது.
ஆசிரியர் குழு ஷீனா பழனிவேலு வரவேற்புரையாற்றினார். திருச்சி நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி ராஜேஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் ஜெயந்தி ராணி புதிய "வக்கீல் அட் வாட்' இதழ் குறித்து விளக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா கலந்துகொண்டு "வக்கீல் அட் வாட்" மின் இதழை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சென்னை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீடு தீர்ப்பானைய பதிவாளர் பாபு, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன், கும்பகோணம் வழக்கறிஞர் சுகுமாரன், இந்து நாளிதழ் ஓய்வு பெற்ற துணை ஆசிரியர் சையது முத்தகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினர் மற்றும் வாழ்த்துரையாற்றியவர்கள் "வக்கீல் அட் வாட்" காலாண்டு இதழை வெளியிட்டனர். இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த வழக்கறிஞர் தனிஸ்லாசுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியர் குழு பிரபாஷினி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, ஷீனா பழனிவேலு, அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்த விழாவில் திருச்சி நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் ராஜலட்சுமி, இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் செல்லம் தமிழரசன், கீதா லட்சுமி, அருள் செல்வி,, மகேஸ்வரி வையாபுரி, தனலட்சுமி, ரஞ்சனி ரங்கநாதன், ஷாநவாஸ், சத்தியபாமா, விஜயலட்சுமி, அகிலாண்டேஸ்வரி, சுருதி சுவர்ணம், லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள், நீதித்துறை பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision