திருச்சி உணவு திருவிழா குறும்பட போட்டியில் வென்ற என்கடமை குறும்படம் சென்னை உணவு திருவிழாவில் ஒளிபரப்பு

Aug 16, 2022 - 03:23
 623
திருச்சி  உணவு திருவிழா குறும்பட போட்டியில் வென்ற என்கடமை குறும்படம் சென்னை உணவு திருவிழாவில் ஒளிபரப்பு

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உணவு திருவிழா குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்ற என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் சென்னை தீவுத்திடலில் நடைபெரும் சிங்கார சென்னை உணவு திருவிழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13,14 வரை நடைப்பெற்றது.

  சிங்கார சென்னை உணவு திருவிழா இவ்விழாவின் தொடக்க விழா நிகழ்வினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு அவர்களும் சென்னை தீவுத்திடலில் தொடங்கி வைத்தனர்.

பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பட்டிமன்றம் மேஜிக் ஷோ, சிலம்பம் போன்ற பாரம்பரிய கலைகள் நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மாணவ மாணவிகள் உலக சாதனை நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற  சிங்கார சென்னை உணவு திருவிழா நிகழ்வில் திருச்சி மாற்றம் அமைப்பு மற்றும் திருப்பூர்ஈஷா மீடியா நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட என் கடமை விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி Dr.P. சதீஸ்குமார் MBBS. MS (Ortho)அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாகடர்.P.ஜகதீஷ் சந்திர போஸ் MBBS அவர்கள் டிரிம்ப் உலக சாதனை புத்தக குழுவின் நிர்வாக இயக்குனர் எஸ். கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலையிலும் பல்லாயிரக்கனக்கான சென்னை வாழ் பொதுமக்கள் முன்னிலையிலும் மிகப்பெரிய அகன்ட டிஜிட்டல் திரையில் என் கடமை விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முழுபடமும் பார்த்து முடித்த பின் படக்குழுவினரை பாராட்டி, படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் ஆகியோருக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி Dr.P. சதீஸ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.திருச்சியை தொடர்ந்து சென்னையிலும் என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்திற்க்கு பாராட்டுகள் கிடைத்துள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO