உணவை வீணாக்கலாமா? அலட்சியம் காட்டும் யாசகர்கள் - புண்ணியம் தேடும் மக்கள்
தனிமனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் தற்போது தேவைக்கு மீறி கிடைக்கும் உணவை வீணாக்கும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக மகாளய அமாவாசை நாளான இன்று (25.09.2022) ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பலர் தங்கள் முன்னோர்களுக்கு உணவு தானம் செய்வதாக எண்ணி யாசகம் பெறுபவர்களுக்கு உணவு வழங்குகின்றனர். இப்படி ஒரே நபருக்கு இவ்வளவு உணவு கொடுத்து என்ன புண்ணியம் வர போகிறது.
இதற்கு பதிலாக எத்தனையோ வேறு இடங்களில் வேறு நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக, அனாதை இல்லங்களுக்கு மதிய உணவாக, சாலை ஓரம் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் உணவு தானம் செய்தால் அதுவும் உங்களுக்கு புண்ணியம் தான். இன்று 50 ரூபாய்க்கு உணவு பொட்டலம் வாங்கி கொடுத்து தங்கள் கடமையை செய்ததாக எண்ணலாமா..
நீங்கள் உணவு தானம் கொடுக்கும் எல்லா நாளும் உங்களுக்கு புண்ணியமே.. இனியாவது யோசித்து உணவு கொடுங்கள். இதுபோல் வீணாக உணவை கொடுக்காதீர்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO