செப்.27 பாரத் பந்த் முழு ஆதரவு திருச்சி மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு

செப்.27 பாரத் பந்த் முழு ஆதரவு திருச்சி மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு

செப் 27−"பாரத் பந்த்" ஆலோசணை கூட்டம். திருச்சி மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட  ஒருங்கிணைப்பு குழு நிா்வாகிகள் கூட்டம் இன்று திருச்சி மிளகுபாறை ப.மாணிக்கம் இல்லத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருச்சி மாநகா் மாவட்ட செயலாளா் K.C.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மாநில ஒருங்கிணைப்பு குழு முடிவுகள் பற்றியும் செப்டம்பா் 27−நடைபெறவுள்ள பாரத் பந்த் ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புறநகா் மாவட்ட செயலாளா் வெ.சிதம்பரம், மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல   ஒருங்கிணைப்பாளா் லெ.செழியன், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கம்  புறநகா் மாவட்ட செயலாளா் P.கனேசன், ப.தியாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளா் R.பழனிசாமி,
ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் S.சம்சுதீன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் மாநகா் மாவட்ட செயலாளா் நி.தங்கதுரை, மக்கள் உாிமை கூட்டணி தெற்கு மாவட்ட அமைப்பாளா் L.ஜோசப், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாவட்ட பொறுப்பாளா் வினோத்மணி உள்ளிட்டோா் கலந்து கொன்டனா்.

மேலும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்... ஒன்றிய மோடி அரசு கொன்டு வந்துள்ள 3-வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற டெல்லியில் விவசாயிகள் போராட்டம் துவங்கி 9−மாதங்கள் நிறைவு பெறும் நாளை ஒட்டி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு செப் 27−ல் அகில இந்திய அளவில் பந்த் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதன் அடிப்படையில் மாநில ஒருங்கிணைப்பு குழு வழி காட்டுதலின் படி திருச்சி மாவட்டத்தில் "பாரத் பந்த்" போராட்டத்தை சிறப்பாக நடத்துவது.

பந்த் போராட்டத்திற்க்கு ஆதரவு தரும் அணைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள், விவசாய சங்கங்களின் தலைவா்கள், வனிகா் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்புகள், பொது நல அமைப்புகளின் ஆதரவுகளை கோருவது. திருச்சி மாநகா் மற்றும் புறநகா் பகுதி கிராமங்களில் செப்-20ந் தேதி முதல் 25, தேதி வரை துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம் செய்து "பந்த்" போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் அணைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வைப்பது. 15−தேதிக்குள் அணைத்து ஒன்றியங்களிலும் அதற்கான தயாாிப்பு கூட்டங்களை நடத்து என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக கடந்த 9−மாத காலத்தில் போராட்ட களத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அாியானா மாநிலம் கா்னால் நகாில் விவசாயிகள் நடத்திய அமைதி பேரணியில் மாநில பா.ஜ.க அரசின் முதலமைச்சா் மனோகா்லால் உத்தரவின் போில் சா் ஆட்சியா் காவல் துறைக்கு போராட்டத்தில் கலந்து கொள்பவா்களில் மண்டை உடையாத விவசாயி ஒருவா் கூட இருக்ககூடாது என வெறிதன உத்தரவால் காவல் துறை நடத்திய கொடுர தாக்குதலில் விவசாயி சுசில்கஜால் மண்டை உடைந்து மரணமடைந்தாா். காட்டுமிரான்டி தனமாக தாக்குதல் நடத்திய அாியானா பா.ஜ.க.அரசுக்கு கடும் கண்டனம் தொிவிப்பது, கொலைவெறி தாக்குதல் நடத்த உத்தவிட்ட கா்னால் மாவட்ட சா் ஆட்சியா் ஆயுஷ் சின்கா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை பணி நீக்கம் செய்ய வேன்டும் என தீா்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn