கடந்த 2 மாதங்களாக EB வயர்கள், பேட்டரிகள் மற்றும் கேபிள் வயர்களை திருடிய நபர்கள் கைது

கடந்த 2 மாதங்களாக EB வயர்கள், பேட்டரிகள் மற்றும் கேபிள் வயர்களை திருடிய நபர்கள் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரிநகர், அம்மாமண்டம், வசந்தநகர், காந்திரோடு, RS ரோடு மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் உள்ள வீடுகள், அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் EB வயர்கள், காப்பர் வயர்கள்,

அரசு அலுவகத்தில் உள்ள பேட்டரிகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான தொலைபேசி டவர்களில் உள்ள காப்பர் வயர்கள் 330 மீட்டர் வயர்கள் திருடி போய்விட்டதாக சம்மந்தப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரை பெற்று, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாநகர உத்தரவின்பேரில் காவல் ஸ்ரீரங்கம் ஆணையர் ந.காமினி, காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவுகளை ஆராய்ந்து, இச்சம்பவத்தில் மூன்று எதிரிகள் சம்மந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேற்படி CCTV கேமரா பதிவுகளின் அடிப்படையில் எதிரிகள் 1) விக்கி (எ) விக்னேஷ், (23), த/பெ.ரவிச்சந்திரன் 2) பாட்ஷா (எ) ராஜேஷ், (32), த/பெ.பார்த்தசாரதி மற்றும் 3) கலைச்செல்வன் (20) த/பெ.மூக்கன் ஆகியோர்கள் அடையாளம் காணப்பட்டு,

எதிரிகள் விக்கி (எ) விக்னேஷ் மற்றும் பாட்ஷா (எ) ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், இவ்விரு எதிரிகளும் தலைமறைவாக உள்ள எதிரி கலைச்செல்வனும் சேர்ந்து கடந்த 2 மாதங்களாக வீடுகளில் இருந்து மின் கம்பத்திற்கு செல்லும் வயர்களை வெட்டி திருடிச் சென்று உருக்கி, காப்பர் கட்டிகளாக்கி மாற்றி, அவற்றை ஸ்ரீரங்கம் நெல்சன் ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் சண்முககனி, (53) த/பெ.மாடசாமி என்பவரிடமும்,

அம்மா மண்டபம் அருகே பழைய இரும்பு கடை நடத்தி வரும் பொன்னுசாமி, (45), த/பெ.சின்னசாமி என்பவரிடமும் கொடுத்து பணம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து எதிரிகள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்பேரில் சண்முக கனி கைது செய்யப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision