காவிரி ஆற்றில் 2 முதலைகள் - ட்ரோன் மூலம் தேடுதல்

காவிரி ஆற்றில் 2 முதலைகள் - ட்ரோன் மூலம் தேடுதல்

திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையிலிருந்து ஸ்ரீரங்கம் மாம்பழம் சாலை இணைக்கும் காவிரி ஆற்றின் நடுவே மணல் தட்டு உள்ளது. மேலும் அங்கு நாணல், காட்டுச் செடி மண்டி காடு போல் காட்சி அளித்துள்ளது. இங்கு முதலை ஒன்று அவ்வப்போது வெளியே வந்து மீன்பிடிக்க மீனவர்களை அச்சுறுத்தி வந்தது. 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 9 அடி நீளமுள்ள முதலை மீனவர் வகையில் சிக்கி வலையை அறுத்துக் கொண்டு ஓடியது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அன்று முதல் அங்கு மீன்பிடிப்பதை நிறுத்திக் கொண்டனர். 

இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நாணல்கள் புதர்கள் அகற்றப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு இருந்த முதலை வெளியேறியது. இந்த நிலையில் நேற்று மாலை 06:00 மணி அளவில் மீண்டும் அதே பகுதியில் 6 அடி நீளம் உள்ள இரண்டு முதலை நடமாட்டங்கள் காணப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனம் கார்களை பாலத்தில் நிறுத்திவிட்டு ஆச்சரியத்துடன் முதலைகளை பார்த்தவுடன் தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

இதனால் காவிரி பாலத்தில் போக்குவரத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பாலத்தின் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர். ஒரே நேரத்தில் நூற்றுக்கு அதிகமானோர் பொதுமக்கள் பாலத்தில் குவிந்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

காவிரி பாலத்தின் அருகே அம்மா மண்டபம் படித்துறையில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் நீராடுவர் இந்த முதலைகளால் எந்த வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலை தங்கி இருக்கும் இடத்தை கண்டறிவதற்காக ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision