ஒவ்வொரு வாரம் புதன் கிழமை தோறும் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பெறப்பெற்ற 44 மனுக்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார், தலைமையில்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் மேற்படி மனுதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக விசாரணை மேற்கொண்டதில் 38 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஒவ்வொரு வாரம் புதன் கிழமை தோறும் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனி தொலைபேசி, 9487464651 எண்ணில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision