அரியமங்கலத்தில் மரக்கழிவுகளில் திடீர் தீ. தீயணைப்பு வீரர்களால் மரப்பட்டறை தப்பியது.
திருச்சி- தஞ்சை சாலையில் அரியமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே திருப்பதி மரப்பட்டை செயல்பட்டு வருகிறது. இந்த மரப்பட்டை தேமுதிக மாவட்ட செயலாளர் கணேசுக்கு சொந்தமானது. இந்நிலையில் நேற்று இரவு மரப்பட்டையிலிருந்து லேசான புகைமூட்டம் வெளியேறியது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் மரப்பட்டறையில் சென்று பார்த்த போது பட்டறை வெளியே கொட்டி வைக்கப்பட்டிருந்த மரக்கழிவுகளில் தீ பற்றி எறிந்து கொண்டிருந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கழிவுகள் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் மரப்பட்டறையில் தீ எரிவது போன்று அதிக வெளிச்சத்துடன் தீ எரிந்து கொண்டிருந்தது.
இதுபற்றி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் மரப்பட்டறைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
இதனையடுத்து தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில்.. மரப்பட்டை வெளியே கொட்டப்பட்டிருந்த மரக் கழிவுகளில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் யாரோ தீ வைத்துள்ளனர். இது மளமளவென எரிந்ததால் மரப்பட்டறை எரிவது போல் காட்சியளித்தது.
ஆனால் விரைந்து செயல்பட்டதால் மரப்பட்டறைக்கு எந்த சேதாரமும் இல்லை. ஆனால் மரக்கழிவுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு 7 ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF