திருச்சி மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு - நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்சி மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு - நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவபெருமாள் கோவில் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதவ பெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்த நொச்சியம், குமரக்குடி, கூடப்பள்ளி, மாண்பிடி மங்கலம் ஆகிய கிராமங்களை 100-க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி - நாமக்கல் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்ணச்சநல்லூர் அருகே மாதவபெருமாள் கோவில் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி- நாமக்கல் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி திருச்சி மாநகராட்சி உடன் மாநகராட்சிகள் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை இணைத்துள்ள நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே கூத்தூா், மாதவபெருமாள் கோயில், பிச்சாண்டவா் கோயில் ஆகிய ஊராட்சிகளையும் திருச்சியில் மாநகராட்சியுடன் இணைத்துள்ளனர்.

இதனை அறிந்த மாதவபெருமாள் கோவில் ஊராட்சி மக்கள் மாநகராட்சியுடன் மாதவபெருமாள் கோவில் ஊராட்சியை இணைத்தால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பறிபோகும். புதிதாக வீடு அமைப்பதற்கான கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயரும்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை தடுத்து போலீசார் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision