திருச்சி உப்பிலியபுரம் அருகே பூட்டிய வீட்டில் கொள்ளையர் கைவரிசை

திருச்சி  உப்பிலியபுரம் அருகே பூட்டிய வீட்டில் கொள்ளையர் கைவரிசை

திருச்சி 

உப்பிலியபுரம் அருகே பூட்டிய வீட்டில் கொள்ளையர் கைவரிசை

 நகை பணம் இல்லாததால் ஆத்திரத்தில் 

வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வால்வை திறந்து வைத்து சென்ற கொள்ளையன். 

 திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்து உள்ள வடக்கு விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் பிரதிக்ஷா (வயது 22) தமிழ்ச்செல்வன் (வயது 27) தம்பதியினர். கணவர் தமிழ்ச்செல்வன் திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் பணிபுரிந்து வருவதாகவும், வாரம் ஒரு முறை மட்டுமே தன் சொந்த ஊருக்கு வருவதாக தெரிகிறது.

 

 தனிமையில் இருந்த பிரதிக்ஷா, பயம் காரணமாக இரவு வேளைகளில், தங்களுக்கு சொந்தமான இரு வீடுகளை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள உறவுக்கார சித்தி வீட்டில் தங்கியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு இரு வீடுகளையும் பூட்டி விட்டு சென்றவர், நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டுகள் திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

 

 தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீடுகளை பூட்டி சாவிகளை மறைவிடத்தில் வைப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு வேளையில் மறைத்து வைக்கப்பட்ட சாவிகளை எடுத்து கதவுகளைத் திறந்து வீட்டுக்குள் இருந்த 2 பீரோக்களின் மேல் வைக்கப்பட்டிருந்த சாவிகளை பயன்படுத்தி பீரோக்களைத் திறந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த அறை சவரன் தோடு வெள்ளி மெட்டிகள் சுமார் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றதும், மற்றொரு வீட்டின் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரின் வால்வுகளை திறந்து விட்டு சென்றதும் தெரியவந்தது.

 திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி தேடி வரு கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision