கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
![கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு](https://trichyvision.com/uploads/images/202502/image_870x_67a5ae2dd9e0b.jpg)
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நடந்தது.
கொத்தடிமை தொழிலாளர் முறையை தடுக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பிப்.,9ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
09.02.2025ம் தேதி விடுமுறை நாள் என்பதால் இன்று 07.02.2025 மாநகராட்சி மைய அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திருமதி. ஜி. திவ்யா,நகர் நல அலுவலர் . திரு. விஜய சந்திரன் மற்றும் மாநகராட்சி உயர் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision