திருச்சி காவல் சரகத்தில் 34 ஆடு திருட்டு வழக்கு பதிவு 147 ஆடுகள் மீட்பு

திருச்சி காவல் சரகத்தில் 34 ஆடு திருட்டு வழக்கு பதிவு 147 ஆடுகள் மீட்பு

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களின் மேற்பார்வையில் கடந்த 23.11.2021-ந் தேதி ஆடு திருடும் நபர்களை பிடிப்பதற்காக 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்களை உள்ளடக்கிய தனிப்படை திருச்சி சரக அளவில் அமைக்கப்பட்டது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆடு திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.60,000/ மதிப்புள்ள 12 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது மற்றும் ஆடுகள் திருடுவதற்காக அவர்கள் பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 23.11.21 முதல் 21.01.22 வரை திருச்சி சரகத்திற்குட்பட்ட (திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மற்றும் பெரம்பலூர்) ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டு சம்மந்தமாக மொத்தம் 34 வழக்குகள் (திருச்சி 14. புதுக்கோட்டை கரூர்- 1, பெரம்பலூர் - 5) பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.7,35,000/- மதிப்புள்ள 147 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆடு திருடுவதற்காக பயன்படுத்திய 8 வாகனங்கள் (கார்-3, டாடா ஏசி-2, இருசக்கர வாகனம் -3) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆடுகள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் ஆடு திருடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சரக தனிப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn