கால்நடைகளுக்கு தோல் நோய் தடுப்பூசி
திருச்சி மாவட்டம் சமயபுரம் ச.கண்ணனூர் பேரூராட்சி பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை தோல் நோய் தாக்கம் உள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுரை பேரில் கிராமப்புறங்களில் உள்ள கால்நடைகளுக்கு
தோல் நோய் அம்மை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பெயர் சமயபுரம் கால்நடை மருத்துவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் கள்ளக்குடி நரசிங்கமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 80ம் மேற்பட்ட பசுமாடு காளை மாடு கன்று குட்டி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமயபுரம் கால்நடை மருத்துவர் டாக்டர் சிவக்குமார் கூறுகையில்.... பசுமாடு காளைமாடு மற்றும் கன்று குட்டிகளுக்கு சத்து குறைவு நாள் ஏற்படும் அம்மை நோய் தாக்கம் ஏற்படுவதற்கு முன்பு தடுப்பூசி செலுத்தப்படும் நோய் தாக்கம் ஏற்பட்ட மாடுகளை அழைத்து மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
கன்று விட்டு ஆறு மாதத்திற்கு மேலாக உள்ள கன்றுகளுக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதேபோல எட்டு மாதத்திற்கு மேலாக இருக்கும் சினை மாடுகளுக்கு தடுப்பூசி போடப்படாது என கால்நடை மருத்துவர் இதனை தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn