திருச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 6 வழக்குகள் பதிவு - மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி 5 நகராட்சி ,14 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 401 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது .
இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கிடையில் திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சிகளில் வேட்புமனு நடைபெறும் இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சிவராசு ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் இன்று வேட்புமனுத் தாக்கலை மாவட்ட தேர்தல் அதிகாரி சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது.... மாநகராட்சி,பேரூராட்சியில் இன்று அதிகமாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். நாளையும் அதிகமாக மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 5 மணிக்குள் யார் வளாகத்திற்கு உள்ளேயே வந்தாலும் அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து உள்ளோம். அதேபோன்று வாக்கு எண்ணும் மையங்களில் முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டு உள்ளது. அரசியல் கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்தை பார்ப்பதற்காக 19 ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை பார்ப்பதற்கு தனி அறையை ஏற்பாடு செய்துள்ளோம்.
அவர்களின் பிரதிநிதி இங்கு இருந்து கொள்ளலாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளிடம் தெரிவித்துள்ளோம் நேற்று இரண்டு பிரச்சினைகள் நடந்துள்ளது. தேவையில்லாத பிரச்சினைகள் வர வேண்டாம் இது போன்று இருந்தால் நடவடிக்கை எடுப்போம். திருச்சி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இதுவரை 42 தேர்தல் பறக்கும் படை
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.