நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், ராம்ஜிநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நவலூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் ஒரு பகுதியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் குழந்தைகள், மாணவ மாணவியர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நூலகத்திற்கு காவல்துறையினரால், சுமார் 120 புத்தகங்கள் அம்மையத்திள் அமைப்பாளர் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்நூலகத்தினை செயல்படுத்துமாறும் மற்றும் கிராமத்தினருக்கும் புத்தக வாசிப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், காவல் துணை கண்காணிப்பாளர், ஜியபுரம் உட்கோட்டம் மற்றும் காவல் ஆய்வாளர், ராம்ஜிநகர் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn