திருச்சியில் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரத்திற்க்கும் மேலாக தாமதம்
திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் தண்டவாளத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் ரயில்களும் சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் ஐந்து மணி நேரம் தாமதமாக சென்று கொண்டிருக்கின்றன. தண்டவாள மறுசீரமைப்பு பணியினால் திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கு உள்ளேயும், வெளியேயும் ஒவ்வொரு ரயிலாக உள்ளே வந்து கொண்டிருக்கிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி இரயில்வே சந்திப்பில் புதிய 10வது நடைமேடை பணிகளும், தண்டவாளங்களை இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரத்து செய்யப்படாத ரயில்கள் இன்று திருச்சி ரயில்வே சந்திப்பை கடந்து செல்ல முடியாமல் தேங்கி நின்றன.
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோயில் எக்ஸ்பிரஸ், பைசாபாத் எக்ஸ்பிரஸ் ஆகிய இரயில்கள் இன்று காலை 6மணிக்கு முன்னதாக திருச்சி இரயில்வே சந்திப்பை கடந்து சென்றிருக்க வேண்டும். இந்த ரயில்கள் அனைத்தும் இரண்டு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை தாமதமாக திருச்சி இரயில்வே சந்திப்பை கடந்து செல்ல இருக்கின்றன.
ராமேஸ்வரம் - கோவை, ராமநாதபுரம் - ஹூப்ளி, சென்னை - மதுரை, அனந்தபுரி - கொல்லம், சென்னை -நாகர்கோவில் செல்லும் ரயில்கள் தாமதமாக திருச்சியை கடந்து செல்கின்றன. திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9.20 மணிக்கு திருச்சி ரயில்வே சந்திப்பில் இருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision