தங்கை முறை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கொலை- 8 பேர் கைது, 4பேருக்கு வலைவீச்சு

தங்கை முறை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கொலை- 8 பேர் கைது, 4பேருக்கு வலைவீச்சு

திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு திரும்பிய வாலிபரை காரில் கடத்தியதாக நான்கு பேரை  தொட்டியம் போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் கருப்பம்பட்டியை சேர்ந்தவர் மணி மகன் கிருஷ்ணமூர்த்தி (25). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த கோபிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் கோபிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த ஜூலை 21-ஆம் தேதி காட்டுப்புத்தூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்ட வழக்கு சம்பந்தமாக தொட்டியம் கோர்ட்டுக்கு வந்ததை அறிந்த கோபிகாவின் உறவினர்கள் காரில் வந்த கிருஷ்ணமூர்த்தியை காரை மறித்து மற்றொரு காரில் கடத்தி உள்ளனர். வெகு நேரம் ஆகியும், கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பாததால் தொட்டியம் காவல் நிலையத்தில் இவரது மனைவி கோபிகா புகார் செய்தார்.

இந்த புகாரையடுத்து தொட்டியம் போலீசார் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபும் புதுக்கோட்டையைச்  சேர்ந்த ஸ்ரீநாத் (24), கார்த்திகை (25), மற்றும் கரூர் மாவட்டம் கோயம்பள்ளியை சேர்ந்த சரவணன் (29), கோபால கிருஷ்ணன் (23) ஆகிய நான்கு பேரை தொட்டியம் போலீசார் 24 தேதி கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்த கடத்தலுக்கு பயன்படுத்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கடத்தல் வழக்காக பதிவு செய்து மேல் விசாரணை செய்த தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கடத்தியவர்களை விசாரணை செய்ததில் தெரிந்து கொண்டனர்.

இந்த நிலையில் அந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் த. முத்தையன் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கோபிகாவின் அண்ணன் ரவிவர்மன் (22), அவரது நண்பன் தினேஷ் (33), கோபிகாவின் தாயார் ஹேமலதா (37), கோபிகாவின் அம்மாயி பாப்பாத்தி (57) ஆகிய நால்வரும் கிருஷ்ணமூர்த்தி காரில் கடத்தி தஞ்சை மாவட்டம் தோகூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுக்காம்ப்பாறை ஆற்றில் வீசி விட்டதாக வாக்குமூலம் தந்துள்ளனர்.

தங்கை முறை பெண்ணை திருமணம் செய்ததால் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் வாலிபரை கடத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்று 30 தேதி 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக கோபிகாவின் சித்தி இந்திரா சித்தப்பா பிரகாஷ் கோபிகாவின் அண்ணனின் நண்பர்கள் பத்திரி, மோகன், ஆகிய நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn