மகா சிவராத்திரியை முன்னிட்டு 61 அடி சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்

மகா சிவராத்திரியை யொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள கூத்தைப்பார் மஹாகாளீஸ்வரி ஆலயத்தில் எழுப்பபட்டு உள்ள 61அடி உயர சிவலிங்கத்திற்கு திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, ஆயிரம் லிட்டர் பால், சந்தனம்,குங்குமம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிவலிங்கத்திற்கு வஸ்திரம் சாற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. 61 - அடி உயர சிவலிங்கம் திருமேனி நிறுவப்பட்டு, ஆயிரம் லிட்டர் பால் மூலம் அபிஷேகம் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision