அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள்

திருவெறும்பூரில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து பேருந்து டயரில் வைத்து நசுக்கி அழித்து அபராதம் விதிப்பு...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலிகளுக்கும் ஹாரன்களால் பொதுமக்களுக்கு பாதிப்புக்குள்ளாகி விபத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் ஒலி மாசு ஏற்படுகிறது.
இது தொடர்பாக திருவரம்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து இன்று திருவெறும்பூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், மற்றும் சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வாகன தணிக்கை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த பத்துக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து இது போன்ற ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ஹாரன்களை பேருந்துகளின் சக்கரத்தில் வைத்து நசுக்கி அழிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision