தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் - தேர்வில் தேர்ச்சிபெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி

தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான காலி பணியிடங்களை   முழுமையாக நிரப்ப வேண்டும் - தேர்வில் தேர்ச்சிபெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி

தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான காலி பணியிடங்களை அதிகப்படுத்தி அறிவித்து முழுமையாக நிரப்ப வேண்டும் என நியமன தேர்வில் தேர்ச்சிபெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ் கிளப்பில் இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில்,தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக கடந்த 21.07.24 ஆம் தேதி அன்று நியமன தேர்வின் போது 2768 காலிபணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது.. ஆனால் 2013 முதல் இன்று வரை 12 ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் 15,000-க்கும் மேல் உள்ள நிலையில், கூடுதல் நியமன பணியிடங்களை அதிகரித்து முழுமையாக நிரப்ப வேண்டும். 

மேலும் கடந்த 12 ஆண்டுகளாக எங்களுடைய வாழ்வாதாரம் வாழ்க்கை முறையை இழந்து போராடி வருகிறோம். இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றும் இதுவரை தமிழ்நாடு அரசு எங்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டினர். 

தொடர்ந்து தமிழ்நாட்டில் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம் அப்போது கூட தமிழ்நாடு அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை. ஆசிரியராக வேண்டுமென பல்வேறு கனவுகளோடு தேர்வு எழுதினால் இதுவரை பணிகள் கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து, மிக மன அழுத்தத்தில் இருக்கிறோம் என தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறப்பான முறையில்

தொழில்நுட்பங்கள் பொருந்திய கல்விகளை மாணவ மாணவிகளுக்கு கற்பித்து வருகிறார்கள். ஆனால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் ஏன் தாமதம் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினர். 12 ஆண்டுகளாக போராடிவரும் எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision