மு.க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட துவாக்குடி நகரக் கழகத்தின் சார்பாக துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் தமிழக முதல்வர் தி.மு.க.வின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாள் விழா 72 நிகழ்வுகளாக நடைபெற்றது அதன் இறுதி நிகழ்வாக துவாக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் துவாக்குடி நகர் மன்ற தலைவர் காயம்பு
சிறப்புரை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனிஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொற்பொழிவு
கலைஞர் மறைவிற்குப் பிறகு வெற்றிடத்தை உழைப்பால் நிரப்பியவர் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் என்று எடுத்துரைத்தார் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர். பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய தமிழக பாடநூல் கழகத் தலைவர் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் கழக கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் திண்டுக்கல் லியோனி அவர்களை வரவேற்பதாகவும் உங்களை போல் நானும்
அவரது உரையை கேட்பதற்கு அவளோடு இருப்பதாகவும் தொகுதி மக்கள் என வரும் பொழுது நான் பல கூட்டங்களில் சொல்வது என்னவென்றால் தமிழ்நாட்டில் எந்த கூட்டத்தில் முன்பு பேசும் பொழுது கூட்டத்தின் முன்பு பேசுவதாகவும் ஆனால் எனது திருவெறும்பூர் தொகுதியில் கூட்டத்தில் பேசும் பொழுது எனது குடும்பத்தின் முன்பு பேசுவதாக உணர்வதாகவும் கூறினார்
மேலும் எனக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற பெருமையை வழங்கியவர்கள் யார் என்றால் இது 2021 மே 2 அன்று தான் வாக்குகள் எண்ணப்பட்ட பொழுது என்னை 49,767 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைத்து பெருமைக்குரிய அமைச்சர் என்ற பதவியை வழங்கி அழகு பார்த்தவர்கள் நீங்கள் தான் என்றும் மேலும் இந்த பெருமை எனது தொகுதி மக்களாகிய உங்களைத் தான் சாறும் என்றும்
இந்த நான்கு ஆண்டுகளில் இந்த துவாக்குடிக்குமட்டும் சாலை அமைத்தல், குளங்கள் மேம்படுத்துதல், மழைநீர் வடிகால் பணி, குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், புதிய பள்ளி கட்டிடம் கட்டுதல், பயணியர் நிழற்குடை, முதலமைச்சர் காலை உணவு திட்ட மைய சமயல் கூடம் அமைத்தல் ,என 62 கோடியை 82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் நாம் செய்திருக்கிறோம் என்றும் மேலும் நமது தமிழக முதல்வர் துவாக்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளியை வரும் 8ம் தேதி மாலை திறக்க வருகை புரிய உள்ளதாகவும் எனவே இந்த கூட்டத்தின் சார்பாக உங்கள் அனைவரையும் நான் வரவேற்பதாகவும்
மேலும் சட்டப்பேரவையில் காலணி என்ற வார்த்தையை தூக்கி எறிந்த ஒரே முதல்வர் யார் என்றால் அது நமது தமிழக முதல்வர் தான் என்றும் மேலும் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை தீட்ட கூடியவர் தான் தமிழக முதல்வர் என்றும் வருகின்ற கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3க்கு அடுத்த நாள் 4ம் தேதி அன்று மகளிர் நலன் கருதி தொகுதி வாரியாக தமிழக முழுவதும் மகளிர் உரிமைத்தொகை முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கான உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாகவும்
தமிழக அரசியல் மட்டுமல்லாமல் இந்திய அரசியலின் ஜாம்பவான் கலைஞர் அவர்கள் இறந்த பொழுது திமுகவை வழிநடத்துவதற்கு யாருமே இல்லை என்று கூறிய நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று பாராட்டப்பட்ட உழைப்பால் இயக்கத்தை வளர்த்தவர் தான் தமிழக முதல்வர் என்றும்.மேலும் தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் கூறியது போல் மீண்டும் திராவிட மாடல்ஆட்சி
பார்ட் 2 நடைபெறும் என்றும் அதற்கு தமிழக முதல்வர் அவர்களின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் மேலும் ஒன்றிய அரசனது நமக்கு பல்வேறு நிதி நெருக்கடியை கொடுத்தாலும் தமிழகத்தை திறம்பட செயல்படுத்தி வரும் ஒப்பற்ற தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை தான் நாம் கொண்டாடி வருகிறோம் என்றும் எனவே இந்த பிறந்த நாளில் அவர் வாழ்வாங்கு வாழ அனைவரும் வாழ்த்துவோம் என்றும், தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் எடுத்துரைத்தார்.கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் நகரக் கழக அவை தலைவர் ஸ்டீபன் ராஜ் நகர இளைஞரணி அமைப்பாளர்
எஸ். செல்வம் மற்றும் துவாக்குடி நகரக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision