பொன்மலை பணிமனையில் சர்வதேச யோகா தின சிறப்பு யோகா பயிற்சி பட்டறை

பொன்மலை பணிமனையில் சர்வதேச யோகா தின சிறப்பு யோகா பயிற்சி பட்டறை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று திருச்சி பொன்மலை பணிமணையில் அமைந்துள்ள பயிற்சி மையத்தின் மண்டபத்தில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. தி ஆர்ட் ஆஃப் லிவிங்கைச் சேர்ந்த அனுபவமிக்க யோகா பயிற்றுனர்  ஏ.செல்வம் வழிகாட்டலின் படி "உடல் நலம் மன நலம் தேச நலன் மற்றும் பணியிட சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி மேம்பாடு அடைதல்" என்ற கருப்பொருளோடு நடைபெற்ற பயிற்சியில் 50 அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சக வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்ச்சிக்கு பொன்மலை பணிமனை முதன்மை பணிமனை மேலாளர் ஷியாமதர்ராம் தலைமை வகித்தார்.

கொரோனா தொற்று பரவும் சூழலில் தனிமனித இடைவெளி மற்றும் அரசுக்கூறிய நெறிகாட்டுதலின் படி குறைந்த எண்ணிக்கையில் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் கூடுதலாக இணைய வழியில் நேரடி ஒளிபரப்பு செய்ததன் பயனாக சுமார் 100 பேர் பங்கேற்ற யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

கொரோனா நோய் தொற்று எதிர்ப்பு திறனுக்கு உதவும் வகையில் பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பயிற்சிக்கு வந்திருந்தவர்களை பணிமனை ஊழியர் நல அதிகாரி சங்கரன் வரவேற்றார். இறுதியில் துணை தலைமை இயந்திர பொறியாளர் கிளமென்ட் பர்னபாஸ் நன்றி தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF