தீபாவளி நெருங்குது திருச்சி மக்களே உஷார்
திருச்சியை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் ஆன்லைன் மூலம் பிஜீ நாயுடு ஸ்வீட் கடையில் இனிப்பு ஆர்டர் செய்தார். பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் கடையிலிருந்து கொடுக்கப்பட்ட இனிப்பு கெட்டு போயிருந்ததே தெரியவந்தது. பின்னர் சம்பந்தப்பட்ட அந்த கடைக்கு தொலைபேசி மூலம் இனிப்பு கெட்டுப் போய் இருப்பது தெரிவிக்கப்பட்டது.
உடனே அந்த இனிப்புகளை எடுத்துக் கொண்டு கடைக்கு வருமாறு ஊழியர்கள் தெரிவித்தனர். கெட்டுப்போன இனிப்பை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றவுடன் ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ஆண்ட்ரூ உணவு மருந்து பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் கடையில் ஆய்வு செய்து இனிப்பகத்தில் உள்ள பாக்கெட்டுகளில் தயார் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்ததை கண்டறிந்தனர். மேலும் அங்கு பணிபுரியக்கூடிய ஊழியர்கள் கையுறை அணியாமல் இருந்ததை கண்டு எச்சரித்து ரூபாய் 3000 அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து பண்டிகை காலம் வர உள்ள நிலையில் பிரபல நிறுவனங்கள் உணவுப் பொருட்களை தரம் இல்லாமலும், கெட்டுப் போயும் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது தொடக்கதையாகி வருகிறது. பொதுமக்கள் கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களை தரத்தை உறுதி செய்த பின் வாங்க வேண்டுமென உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision