ரெட் அலர்ட் லிஸ்டில் திருச்சி

ரெட் அலர்ட் லிஸ்டில் திருச்சி

தமிழ்நாடு மட்டும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் அக்டோபர் 21ம் தேதி தொடங்கியது. இருப்பினும் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (14.11.2023) முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்பொழுது பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது

இதன் காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் (ஆரஞ்சு அலர்ட்) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் (ரெட் அலர்ட) மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது