தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள ஆடு விற்பனை வாரச் சந்தையில், தீபாவளியினை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகளவில் எதிர்பார்த்த நிலையில் ஆடுகள் வரத்து குறைவானதால் விற்பனை மந்தமாக நடைப்பெற்றது.

   சமயபுரம் பேரூராட்சி எல்லைக் குட்பட்ட பகுதியான திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பல ஆண்டுகளாக ஆட்டுச் சந்தை செயல்படுகிறது. இந்த ஆட்டுச் சந்தைக்கு சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, பாடாலூர் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அப்பகுதி விவசாயிகள் தங்களது வெள்ளாடு, செம்மறி ஆடுகள் போன்றவற்றை வாரந்தோறும் செயல்படும் ஆட்டுச் சந்தை யில் தங்களது ஆடுகளை விற்பனை செய்கின்றனர்.

அவ்வாறு விவசாயிகள் விற்பனை செய்யும் ஆடுகளை திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் , தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியபாரிகள் வந்திருந்து கடா ஆடுகளை விற்பனைக்காவும், கோட்டை ஆடுகள் மற்றும் ஆடு குட்டிகளை வளர்ப்பதற்காகவும் வாங்கி செல்வதனை பல ஆண்டுகளாக வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

வருகின்ற 24 ம் தேதி தீபாவளி பண்டிகையினையொட்டி ஆட்டுக்கறி விற்பனைக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியபாரிகள் இந்த வாரச் சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்தனர். வழக்கத்தினை விட அதிகளவில் ஆடுகளை வியபாரிகள் விற்பனைக்கு கொண்டு் வந்திருந்தனர். இதனை வாங்கவும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் வேன் மற்றும் லாரிகளில் வியபாரிகள் வந்திருந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்..

 

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் ஆடுகள் வரத்தும் விற்பனையும் மந்தமாக இருந்ததாக வியாபாரிகளும் விற்பனையாளர்களும் கூறினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO