திருச்சி மெத்தடிஸ்ட் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சி மெத்தடிஸ்ட் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

 திருச்சி உறையூரில் உள்ள மெத்தடிஸ்ட் பள்ளியில் ட்ரை பவுண்டேஷன்(TRY Foundation ) சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.

ட்ரை பவுண்டேஷன் அமைப்பினர் பசுமை வளாகம் என்ற திட்டத்தின் மூலம் பள்ளி,கல்லூரிகளின் வளாகங்களை பசுமையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இயற்கையான சூழல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் அளிக்கும் எனவே பசுமை வளாகம் வாசகப் பூங்காவாக உருவாகுவது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

திட்டத்தின் ஒரு பகுதியாகதிருச்சி மெத்தடிஸ்ட் பள்ளியினை பசுமை வளாகமாக மாற்ற பள்ளி வளாகத்தில் பெண்கள் விடுதி அருகில் சுமார் 6000 பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

இவ்விழாவில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், பிஷப்Rt.Rev.Dr சந்திரசேகரன், ட்ரை பவுண்டேஷன் அமைப்பினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  கலந்து கொண்டனர். மரக்கன்றுகள் நடும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்   ட்ரைபவுண்டேஷன் அமைப்பினர் செய்திருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

 https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய....

  https://t.me/trichyvisionn