10ம் வகுப்பு பொதுத்தேர்வு திருச்சியில் 34 ஆயிரத்து 857 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு திருச்சியில் 34 ஆயிரத்து 857 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 449 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 172 மையங்களில் தேர்வெழுத உள்ளனர்.

பத்தாம் வகுப்பில் 17,494 மாணவர்களும், 17,363 மாணவிகளும் என மொத்தம் 34,857 மாணவ/மாணவியரும் பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர். தேர்வு பணியில் 133 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 133 துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுப்பாளர்கள், 30 வழித்தட அலுவலர்கள்,

265 நிலையான/பறக்கும் படை உறுப்பினர்கள், 2407 தேர்வறை கண்காணிப்பாளர்கள் 229 சொல்வதை எழுதுபவர்கள், மற்றும் 275 அலுவலகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.