திருச்சியில் காவல் நிலையத்தை சூழ்ந்த மழை வெள்ளம்
திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் செயல்பட்டு வரும் பெல் காவல் நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரானது காவல் நிலையம் உள்ளே புகும் நிலை உள்ளது. இந்த மழை வெள்ள நீரை வெளியேற்ற பெல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision