மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் - 4வது இடத்தைப் பிடித்தது திருச்சி மாவட்டம்
தமிழகத்தில் கடந்த நான்கு வாரங்களாக ஞாயிற்று கிழமைகளில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஐந்தாவது வாரமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நேற்று (10.10.2021) நடைபெற்றது.
இதில் திருச்சி மாநகரில் 192 இடங்களிலும், 2 நடமாடும் குழுக்கள் மூலமாக ஊரகப் பகுதிகளில் 418 இடங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் திருச்சி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 228 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 44 ஆயிரத்து 466 பேர் இரண்டாவது தவணைத் தடுப்பூசியும் என மொத்தம் 90 ஆயிரத்து 654 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தமிழக அளவில் நேற்று நடைபெற்ற கொரோனோ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையில் திருச்சி மாவட்டம் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn