டாஸ்மாக்கில் மூன்று சரக்கிற்கு தடை? - மது பிரியர்கள் அதிர்ச்சி

டாஸ்மாக்கில் மூன்று சரக்கிற்கு தடை? - மது பிரியர்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் சில்லறை மதுபான விற்பனை செய்து வருகிறது. இதில் மதுபானங்களில் பீர் ஆயுட் காலம் 6 மாதம். பிறவகை மதுபானங்களுக்கு கிடையாது. அதே நேரத்தில் அவற்றில் ஆல்கஹால் அளவு 42.8 சதவீதம் இருக்க வேண்டும். அதை விடகுறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் விற்கக்கூடாது.

இந்த நிலையில் 3 பிராண்ட் மது வகைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம் அதிரடியாக தடை விடுத்து உத்தரவிட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட மது வகைகளில், சம்பத்தில் தொடங்கப்பட்ட வீரன் ஸ்பெஷல் பிராந்தியும் இடம் பெற்றுள்ளது. மற்றவை, ஒஸ்ட் சீக்ரெட் பிராந்தி (2018), டிராபிக் கனா விஎஸ்ஓபி பிராந்தி (2020) ஆகும்

இந்த வகை மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், அவற்றின் இருப்பு விவரங்களை உடனடியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கடை விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடைகளுக்கு டாஸ்மாக் மது பானங்களை வினியோகம் செய்த பின்னர்கூட அவற்றின் மாதிரிகளை சேகரித்து நாங்கள் பரிசோதனைக்கு அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு குவார்ட்டர் மது பாட்டிலிலும் (180 மில்லி) 42.8 சதவீதம் ஆல்கஹால் இருக்க வேண்டும். பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மதுபானங்கள் விற்பனைக்கு தகுதியானவை அல்ல என்பதால்தான் இந்த 3 வகை மதுபானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார். தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள மது வகைகளில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருப்பதால்தான் (வீரியம் அதிகம்) தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென 3 மதுபான வகைகளின் விற்பனையை டாஸ்மாக் தடை செய்திருப்பது, மதுப்பிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள வீரன் ஸ்பெஷல் பிராந்தி குவார்ட்டர் ரூ.140, டிராபிக்கனா விஎஸ்ஓபி பிராத்தி குவார்ட்டர் ரூ.170, ஒஸ்ட் சீக்ரெட் பிராந்தி குவார்ட்டர் ரூ. 170 என்ற விலைக்கு விற்பனையாகி வந்தன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision